Title of the document

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post