Title of the document











புதுக்கோட்டை ,நவ.13: குழந்தைகள் தினவிழாவையொட்டி  உருவம்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில்  மாணவர்கள் டான்ஸ் ஆடியும்  ,நேருமாமா பாட்டு பாடியும் கிராம மக்களின் பாராட்டைப் பெற்றனர்..

 புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது..

விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார்..பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார்.

விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய  சித்த மருத்துவர் சுயமரியாதை பேசியதாவது:
குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.காரணம்
 குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் நல்வாழ்வுகாக பல்வேறு திட்டங்கள் நம் நாட்டில்  நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.. அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது என்றார்...,மேலும் இங்கு வந்துள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.தங்களது குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்..குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளி வந்து திரும்பும் நேரம் வரை நடைபெற்ற நிகழ்வுகளை பெற்றோர்களிடம் கூற வேண்டும்.பெற்றோர்களும் தங்களது குழந்தைகளிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல எண்ணம் உடையவர்களாகவும் நல்ல பழக்க வழக்கம் உடையவர்களாகவும் வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்...

வட்டார வளமைய பயிற்றுநர் த.கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்..

முன்னதாக நேருவின் புகைப்படத்திற்கு மாணவர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..
பின்னர் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவர்கள் நடனம் ஆடியும்,  பாட்டுப் பாடியும் ,நேரு மாமா பற்றி பேசியும் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனர்..

 பின்னர்  குழந்தைகள் தின விழா கேக்கினை பெற்றோர்கள் வெட்டி  அதனை தங்களது குழந்தைகளுக்கு  ஊட்டிவிட்டனர்.

 இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற  பேச்சுப்போட்டி,  நடனப் போட்டிபாட்டுப்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் நட்டனர்..

முடிவில்  சர்வீஸ் டூ சொசைட்டி  அமைப்பைச் சேர்ந்த துபாய் அராப்டெக் கனஸ்ட்ரக்‌ஷன் சீனியர் குவாலிட்டி மேனேஜர்  ரவி சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட
புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து   வாழ்த்து அட்டையில் பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து  பெற்றோர்களால் குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார்...பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியர் நந்தினி நன்றி கூறினார்....

விழாவில் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள்,கிராமக்கல்விக் குழுவினர்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post