Title of the document

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவியர், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டக்கோரி, பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர்.உலக கழிவறை தினத்தையொட்டி, மருதம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், கழிப்பறை முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.துாய்மை பாரத இயக்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாரிச்சாமி, ராஜ்குமார் மற்றும் துாய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வீடுகளில் கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்துவம், சுற்றுப்புற துாய்மை, சுகாதாரம் காத்தல் போன்றவை குறித்து, மாணவ - மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத மாணவ - மாணவியர், கழிப்பறை கட்டுதல் குறித்து, தங்கள் பெற்றோரை வலியுறுத்த வேண்டும் என, இந்நிகழ்ச்சியில் அறிவுறுத்தப் பட்டது.அதை தொடர்ந்து, வீடுகளில் கழிப்பறை கட்டித்தர, பெற்றோரை வலியுறுத்தி, மாணவியர் தங்கள் முகவரிக்கு கடிதம் எழுதினர்.அக்கடிதங்களை, அஞ்சலகம் மூலம், மாணவியர் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post