Title of the document

1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான்.

1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர்

1805 – நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.

1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.

1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.

1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.

1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.

1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post