TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு

Monday, 19 November 2018



 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.'ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த போராட்டங்களுக்கு பலன் இல்லாததால், நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. ஆனால், சங்க நிர்வாகிகள் இடையே, கருத்து ஒற்றுமை ஏற்படாததால், போராட்ட தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நவ., 16ல் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், நவ., 27க்கு பதில், டிச., 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக, மாநில அளவில், 20 ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறும் குழுவும், மாவட்ட வாரியாக, ஆறு பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இன்றும், நாளையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது; 25ல், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.வரும், 26 முதல், 30ம் தேதி வரை, மாவட்ட அளவில் போராட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பின், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.
Post a Comment

Popular Posts

 

Google+ Followers

Follow by Email

Most Reading