Title of the document

பிஞ்சுகளின் புயல்  நிவாரணம்
உண்டியல் சேமிப்பை கஜா  புயல் பாதிப்புக்கு அரிசி மூட்டைகளாக அனுப்பிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக  அரசி மூட்டைகளை அனுப்பினார்கள்.
                          
                                 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விளக்கமாக கூறினார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள் தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில் "சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் "என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து கஜா புயல் பாதிப்புக்கு   கொடுப்பது என முடிவெடுத்தனர்.
                                 பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த தொகையை ரூபாய் 850யை   பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். மேலும் பள்ளி செயலர் அரு . சோமசுந்தரம் , தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து 11 அரிசி மூடைகளை   கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி ,கோமாபுரம்,வடுகபட்டி பகுதிகளுக்கு அனுப்பினார்கள் .பள்ளி தலைமை ஆசிரியர் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாயும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ,பள்ளி செயலர், தலைமை ஆசிரியர்  மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் வகையில் 11 அரிசி மூடைகளை அனுப்பினார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசி மூட்டைகள் அனுப்பியது   தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தது :
                                         எங்கள் பள்ளியில்    நாங்கள் தொடர்ந்து பல மாதங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டியல் ஆசிரியர் செலவில் வாங்கி கொடுத்து அதனில் அவர்களால் முடிந்த காசை சமுதாயத்திற்கு உதவும் வகையில் கொடுக்கிறோம் என்கிற என்ணதோடு சேர்க்க சொல்லி வருகிறோம்.அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறது.மேலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் வளருகிறது.பள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க  ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
                                 கஜா புயல் பாதிப்பு தொடர்பான செய்தியை மாணவர்களிடம் காலை வழிபாட்டு கூட்டத்தில் எடுத்து சொன்னோம்.அப்போது மாணவர்கள் வந்து தங்களது கருத்துக்களை சொல்லும்போது, பிஞ்சு குழந்தைகள் முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை சேர்க்கும் உண்டியல் சேமிப்பை சமுதாய நோக்கத்தோடு கொடுத்து உதவுவோம் என்றனர்.உடனே மாணவர்களின் முடிவுபடி உண்டியல் பணத்தை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை என்ன செய்து அதிலிருந்து கிடைத்த  850 ரூபாயுடன்பள்ளி செயலர்,ஆசிரியர்கள் மற்றும் எனது பங்களிப்புடன் 11 அரிசி மூட்டைகளை வாங்கி அனுப்பினோம்.கந்தவர்க்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றும் மணிகண்டன் ஆலோசனைப்படி கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி ,கோமாபுரம்,வடுகபட்டி,வாண்டையான்பட்டி கிராமங்களுக்கு அரசி கொடுத்து உதவ அனுப்பி உள்ளோம்.  இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்துக்கு 8000 ரூபாய் நிவாரணமும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது போன்று நல்ல செயல்பாடுகள் இந்த சிறு வயதில் வந்தால் அது மாணவர்களுக்கு வரும் காலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.என்று கூறினார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

நீங்களும் கஜா புயல் பாதிப்புக்கு   உங்களின் ஈரமான உதவியை செய்ய கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு எண் :9942503088
புதுக்கோட்டை ,கந்தவர்க்கோட்டை ,ஆலங்குடி,கீரமங்கலம் பகுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள்  மிகவும்  சிரமப்படுவதாக நண்பர் தெரிவித்தார்.இன்று மாலை உதவிகளை வழங்குவதற்காக நேரில் செல்ல உள்ளேன்.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
செல் :8056240653
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post