Title of the document


ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.



ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளை எக்காரணத்தை கொண்டும் மூடக் கூடாது என்பது குறித்து இந்த அமைப்பு தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post