Title of the document
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, பள்ளி கல்வி கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தாக்கிய, கஜா புயல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், நாகை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.தனியார் நிறுவனங்கள், வீடுகள் மட்டுமின்றி, மின் கட்டமைப்புகள், சாலைகள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில், பள்ளி, கல்லுாரி களில், உள் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.பல இடங்களில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஜன்னல்கள், மேற்கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் மாணவர் விடுதிகளும், கழிவறைகளும் இடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்த சேதங்களை விரைவில் சரி செய்து, மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுள்ள, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை சீரமைக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post