Title of the document
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு பொதுதேர்வு  நடத்தப்படுகிறது. இதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 1200 மதிப்பெண்களில் இருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் குறித்து  அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:2018-19ம் கல்வியாண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள  மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்ப அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  மற்றும் முதல்வர்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
அதில் பள்ளியின் பெயர், பள்ளியின் எண், கல்வி மாவட்டம், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள், அருகில் தேர்வு எழுத உள்ள  பள்ளியின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். 
இந்த விவரங்களை சேகரித்து தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் தேர்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை தேர்வுத்துறை  இயக்குனர் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post