Title of the document


கமுதி ஒன்றியத்தில் உள்ள 48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
  கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் என 48 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் வருகைப் பதிவேடு, இலவச நலத்திட்ட உதவி பதிவேடுகள், அடிப்படை வசதிகள், வருகைப் பதிவேடுகள், மாணவர்களின் கல்வித்திறன், வாசித்தல், ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில் ஆய்வு செய்யபட்ட அறிக்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் கமுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post