Title of the document

பணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 1972ஆம் ஆண்டின் பணிக்கொடைச் சட்டப்படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியிருந்தால்அவருக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும்.

இந்தப் பணிக்கொடைக்கான காலவரம்பைக் குறைப்பது பற்றித் தொழில்துறையினரிடமிருந்து தொழிலாளர் நல அமைச்சகம் கருத்துக்களைக் கேட்டிருந்தது. அதன்படி பணிக்கொடைக்கான காலவரம்பை 5ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அமைப்புச்சார்ந்த பிரிவில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைவர்.3ஆண்டுக் காலத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளவர்களும் இதன்மூலம் பயனடைவர். இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை கிடையாது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post