Title of the document



சென்னை, பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை முடிந்த நிலையில், டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில், குழந்தைகள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.உறுதிமொழி வருமாறு:நான், என் வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ, பள்ளி வளாங்களிலோ, டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களை குவிக்க மாட்டேன். தேவையற்ற பொருட்கள் கிடந்தால், அவற்றை உடனே அகற்றுவேன்.என் வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள் உள்ளிட்டவற்றை, கொசு புகாத வண்ணம் மூடி வைப்போம். தண்ணீர் சேகரிப்பு தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்து வைப்போம். அரசு மேற்கொள்ளும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், நானும், பெற்றோரும், அண்டை வீட்டாரும் ஒத்துழைப்போம்.இவ்வாறு உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post