Title of the document
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் வந்து படிக்கும் வகையில், சர்வதேச அளவில் பிரபலமடையக் காரணம், எங்கள் கல்வி நிறுவனத்தில், நாங்கள் கல்வியை மட்டுமே போதிப்பதில்லை. ஒரு பொருளை துாக்க, எப்படி கையின் ஐந்து விரல்களும் தேவையோ, அதேபோன்று, ஒரு மாணவர் வாழ்க்கையில் சிறப்படைய கல்வி, நல்லொழுக்கம், கடின உழைப்பு, விளையாட்டு, கடவுள் பக்தி என ஐந்து பண்புகள் அவசியம்.அதிக மதிப்பெண்களுக்கு மட்டுமே, அதீத முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், ஒழுக்கம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இச்சூழலில், இந்த ஐந்து பண்புகளையும் பெற எங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு இருக்கும். நாசாவில் சேரவேண்டும், நிலவுக்கு செல்ல வேண்டும் என்று வேறுபட்ட கனவுகள் இருக்கும். அவர்களது கனவு அறிந்து, அதற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துகிறோம்.கல்விப் பயணமாக, ஏராளமான வெளிநாடுகளுக்கு, எங்கள் மாணவர்களை அழைத்து செல்கிறோம். அந்த பயணங்கள் மூலமாக, சுத்தம், நேர மேலாண்மை உள்ளிட்ட பல அம்சங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். ஒவ்வொரு நாளும், துாக்கம், படிப்பு, விளையாட்டு என அனைத்திற்கும் முறையாக நேரம் ஒதுக்கி அவற்றை கடைப்பிடிக்க கற்றுக்கொடுக்கிறோம். இவற்றை பள்ளியில் மட்டுமே கற்றுக் கொள்ளவும் முடியும்.பெரும்பாலான பெற்றோர், அவர்களது குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். எங்கள் கல்வி நிறுவனத்தில் மதிப்பெண்களை விட, குழந்தைகளின் தனித்தன்மைக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். அனைத்து குழந்தைகளும், 100 மதிப்பெண் பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. சில குழந்தைகள், 60 மதிப்பெண் பெற்றாலும், இதர திறனைப் பெற்றிருப்பார்கள். சரியாக ஊக்கம் அளித்தால், அந்த திறனைக்கொண்டு சாதனை படைப்பார்கள். இவ்வாறு, ஒவ்வொரு குழந்தையின், தனித்திறமையை கண்டறிந்து, அவற்றில் ஊக்கம் அளிக்கிறோம். இது எங்கள் கல்வி நிறுவனத்தின் தனித்தன்மை என்றும் கூறலாம்.நுழைவுத் தேர்விலும் சாதிக்கலாம்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்து, அவற்றை அன்று மாலையே திரும்ப படித்துவந்தால் போதும், அவர்களால் 'நீட்' உட்பட எந்த நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற முடியும். பள்ளி படிப்பை சிறப்பாக கற்று தேர்ந்து, அதன்பிறகு, நுழைவுத் தேர்வுக்கான சில நுணுக்கங்களுக்கு மட்டும் பயிற்சி பெற்றால் போதும், மாணவர்களால் நுழைவுத் தேர்விலும் சாதிக்க முடியும் என்பது எனது கருத்து!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post