Title of the document

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் அக்டோபர் 31. அன்றைய நாளில் உலகின்  மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை  தேசிய ஒருமைப்பாடு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பல்கலைக்கழகங்களின்  துணை வேந்தர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேசிய ஒருமைபாடு தினத்தில் ஒருமைப்பாடுக்கான மராத்தான்  ஓட்டம் நடத்துங்கள். ஆங்கிலம் அல்லது இந்தியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 
தேசிய ஒருமைப்பாடு தொடர்பான வினாடி வினா, விவாதங்கள், போட்டிகளை நடத்துங்கள். என்சிசி பயிற்சி அளிக்கப்படும் இடங்களின் ராணுவ  அதிகாரி, முன்னாள் ராணுவ அதிகாரிகளை அழைத்து தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, பாதுகாப்பு உள்பட தொடர்புடைய தலைப்புகளில் மாணவர்கள்  மத்தியில் உரையாற்ற வையுங்கள். உங்கள் பல்கலைக்கழகங்களிலும், அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் தேசிய ஒருமைப்பாடு தினத்தை  கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 29ம் தேதியை சர்ஜிக்கல்  ஸ்டிரைக் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது. 
இதற்குமுன் இவ்வாறான நடைமுறை ஏதும் பின்பற்றப்படாத நிலையில், மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் தலையிடுவதாக  அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாடுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால் அது கட்டாயம்  அல்ல என்று அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை கொண்டாடுமாறு யுஜிசி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தினத்தை கட்டாயம் கொண்டாட வேண்டுமா, வேண்டாமா என்று கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் நிர்வாகத்தினரை  குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post