Title of the document
ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறையும், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பள்ளியில் பயிலும் குழந்தையின் தாயார் பெண் தூய்மைப் பணியாளர் என்றால் அவர்களுக்கான வேலை நேரத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு பொருள்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதையும்,  அந்த மதிப்பெண்களை கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசு ஆணையை திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சு.சந்திரசேகர், எழுத்தாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கல்வி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post