Title of the document



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி   கல்விமாவட்டத்தில் உள்ள சுளிஒச்சான்பட்டி  அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் ஐக்கிய  நாடுகள் சபை தினம் இன்று (24/10/2018, புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.

 உலக அமைதி, பாதுகாப்பு, உலக நாடுகளின் நட்புறவுகளை மேம்படுத்துதல்  மற்றும் பொருளாதாரம், சமூக நலத்திற்கான ஒத்துழைப்பு ஆகிய .ஐ.நா வின் முக்கிய கொள்கைகளை மாணவா்களுக்கு உணா்த்தும் விதமாக இன்று ஐ.நா. தினம் சமூக அறிவியல் மன்றம் சாா்பாக  கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் திரு வி.ச.நவநீதகிருஷ்ணன் அவா்கள் தலைமை தாங்கினாா்.  பெற்றோா் ஆசிரிய கழக தலைவா் திரு மகேஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் திருமதி இராணியம்மாள்  ஆகியோா் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனா். மாணவ மாணவிகளுக்கு உலக அமைதி மற்றும் பாதுகாப்பு தொடா்பான சொற்பொழிவுகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள மாணவ மாணவிகளுக்கு இந்நிகழ்ச்சி உறுதுணையாக இருந்தது. இறுதியாக சமூக அறிவியல் பாட ஆசிரியா் திரு. யோகராஜ் அவா்கள் நன்றியுரை கூறினாா்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post