Title of the document


தீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி விடுமுறை எத்தனை நாட்கள் என, தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும், வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் திங்கள் கிழமையும் விடுமுறை கிடைத்தால், சனிக்கிழமை முதல், செவ்வாய் கிழமை வரை, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், தீபாவளிக்கு தொடர் விடுமுறை எடுத்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு, செவ்வாய் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால், ஊருக்கு செல்வதா, வேண்டாமா என, குழப்பத்தில் தவிக்கின்றனர்.திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க, தலைமை ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இவ்வாறு அறிவித்தால், ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்கு ஈடாக, சனிக் கிழமைகளில் அரைநாள் வகுப்பு நடத்தி, சமப்படுத்தி கொள்ளலாம்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இதற்கு, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து, திடீர் விடுமுறைக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீபாவளிக்கு விடுமுறையை நீட்டித்தால், பாடங்கள் நடத்துவது தாமதமாகும்.சில ஆசிரியர்கள் மட்டும், விடுமுறை எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, பள்ளியை நடத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post