Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குடியரசு தின அணிவகுப்புக்கு மதுரை மாணவி தேர்வு: ரத்த தானம், தூய்மைப் பணி, கல்விச் சேவைக்காக கவுரவம்

Monday, 1 October 2018மாணவர்களிடம் தற்போது சுற் றுச்சூழல், ரத்த தானம், சுகாதாரம் பற்றிய சமூகம், அரசியல் சார்ந்தவிழிப்பணர்வு சிந்தனை அதிகரித்து வருகிறது.

அவர்களில் சற்று வித்தியாசமானவர் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல் லூரியில் இளங்கலை ஆங்கிலம் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி நர்மதா.வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில் வசிக்கும் இவர்,கடந்த 2 ஆண்டு களில் சுகாதாரம், ரத்ததானம், கல்வி சேவை போன்ற சமூகப் பணிகளில் தனி நபராகவும், குழுவாகவும் செய்த சேவைகளுக்காக, 2019-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி புது டில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வாகி உள்ளார்.கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக கிராமங்களில் சுகாதாரப்பணி, ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு பயிற்சி போன்ற தன்னால் முடிந்த சேவைகளை தான் வசிக்கும் பகுதியில் இவர் செய்து வருகிறார்.

நாராயணி என்ற பெயரில் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தூய்மை பாரதத் திட்டவிழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.அதை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் விழிப்புணர்வு செய்யும் கிராமங்களில் வீடு, வீடாக தள்ளுவண்டியுடன் சென்று குவியும் குப்பைகளை சேகரித்து பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்து கிராம மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பியதும் மாலை நேரங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு தனிப் பயிற்சி எடுக்கிறார்.தான் மட்டும் ரத்த தானம் செய் யாமல், அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் 'வாட்ஸ் ஆப்' மூலம் ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக்கி ரத்த தானம் செய்ய வைக்கிறார்.இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர்டி. மருதுபாண்டியன் இவரை அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள சந்தோஷத்தில் இருந்த மாணவி நர்மதாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.''சிறு வயதில் இருந்தே சமூகப் பணிகளில் எனக்கு நாட்டம் அதிகம். அதன் காரணமாக, கல்லூரி என்எஸ்எஸ்-ல் இணைந்து சேவைகளில் ஈடுபட்டேன்.தனி ஆளாக மட்டும் சாத்தியம் இல்லை என்பதால் எனது நண்பர்களையும் சேர்த்துக் கொண்டேன்.அதற்காக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த கொ. வீரராகவராவ், கூடுதல் ஆட்சியராக இருந்த ரோகினி ராமதாஸ், மாநகராட்சி மற்றும் மாநகர் காவல் ஆணையர்களிடம் பாராட்டு பெற்றேன். அது ரொம்ப ஊக்கமாக இருந்தது.

சுகாதாரம் இன்று முக்கிய மானது என்பதால் எங்கள் பகுதியில் என்எஸ்எஸ் மற்றும் நேரு யுவகேந்திராவுடன் இணை ந்து சுகாதார விழிப்புணர்வு செய் கிறோம்.எனது சேவைக்காக டில்லி யில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த வாய்ப்பை எனக்கும், எனது கல்லூரிக்கும், என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கும் கிடைத்த விருதாக எண்ணுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment

Popular Posts

 

அரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் ...

Google+ Followers

Follow by Email

Most Reading