Title of the document

மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக,  வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்யைன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுற்றுச்சுழுல் துறையில் ஜனவரி 2019-க்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறித்த விழிப்புணா்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பாலீத்தீன் பயன்படுத்தாத நிலை உருவாக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக, வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post