Title of the document
தினசரி வகுப்புக்கான பேராசிரியர்கள் பட்டியலை பயன்படுத்தி, தொலைநிலை கல்விக்கான அனுமதி பெற, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலையின் சார்பில், பட்ட படிப்புகள், முதுநிலை படிப்பு என, 60க்கும் மேற்பட்ட படிப்புகள், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அனுமதியுடன் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும், புதிய மாணவர் சேர்க்கைக்கு, யு.ஜி.சி.,யிடம் அனுமதி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், 51 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, சென்னை பல்கலையில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், மூன்று படிப்புகளுக்கு மட்டும், யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. பி.ஏ., மற்றும் எம்.ஏ., பொது நிர்வாக படிப்பு, மற்றும் எம்.ஏ., அரசியல் அறிவியல் படிப்புக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது. அவற்றுக்கு மட்டும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.தொலைநிலை கல்வி வழியே தான், சென்னை பல்கலைக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை கணக்கிட்டே, பல்கலையின் பேராசிரியர், ஊழியர் சம்பளம் மற்றும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
எனவே, தொலைநிலை கல்விக்கான அனுமதி பெறுவதில், பல்கலை நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.தற்போதைய நிலையில், பல்கலையின் தொலைநிலை கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. அதேபோல், சென்னை பல்கலை விண்ணப்பித்த படிப்புகளுக்கு, கற்பித்தல் பணியில் ஈடுபடும் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை.
எனவே, இயக்குனர் இல்லாமலும், பேராசிரியர்கள் இல்லாமலும், படிப்புகளை எப்படி நடத்த முடியும் என, யு.ஜி.சி., தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த காரணங்களால், தொலைநிலை கல்விக்கான அனுமதியை, யு.ஜி.சி., வழங்கவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பிரச்னை குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சில்
கூட்டத்தில், பேராசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து, பல்கலையின் தினசரி வகுப்புகளை நடத்தும் பேராசிரியர்களின் பட்டியலை, யு.ஜி.சி.,க்கு கொடுத்து, அதன் வழியே அனுமதியை பெற, சென்னை பல்கலை தீவிர முயற்சி
மேற்கொண்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post