Title of the document
பழநி அருகே சின்னகாந்திபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளதாக புகார் தெரிவித்து, பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், மாணவர்களை படிக்க அனுப்ப மட்டோம் எனக் கூறினர். பழநி சின்னகாந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு கடந்த ஆண்டு ரூ.1.60 கோடி செலவில் வகுப்பறை மற்றும் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் காம்பவுண்ட் சுவர் 5நாட்களுககு முன் சேதமடைந்து கீழே விழுந்தது. இதேபோல வகுப்பறை கட்டடமும் சேதமடைந்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்தால் எப்போது வேண்டுமானலும் கட்டடம் இடிந்துவிழும் அபாயம் உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.நேற்று பெற்றோர், பொதுமக்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மழைக்காலம் என்பதால் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆகையால் கட்டடத்தை செப்பனிடும் வரை மாணவர்களை அனுப்பமாட்டோம் எனக்கூறினர். ஆசிரியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பெற்றோர் கலைந்து சென்றனர். உடனடியாக பள்ளிக் கட்டடத்தை செப்பனிட வேண்டும், என பெற்றோர், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post