Title of the document

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவின் 8-ஆவது நாளான வியாழக்கிழமை (அக். 18) பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மேலும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே சூரிய, மின்சக்தி மற்றும் ஆளில்லா விமானங்கள் குறித்த அறிவை வளர்க்கும் வகையில் உலகத் தரத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post