Title of the document

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்காததால், மாணவர்கள் பழைய பள்ளிக்கு வர தயங்குகின்றனர்.இதனால், கடந்தாண்டு படித்தோரில், மீண்டும் அதே பள்ளியில் கல்வி தொடர விரும்புவோர் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் நிர்வாக பணிகள் மேற்கொள்ள, தலைமையாசிரியர் நியமனத்துக்கு, வரும் 22ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது.அன்றைய தினம் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை, மாவட்ட வாரியாக அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'கோவையில், ஐந்து நடுநிலைப்பள்ளிகளும், ஐந்து உயர்நிலைப்பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. கலந்தாய்வு நடக்கும் நாளிலே, மாணவர் விபரங்கள் அனுப்ப உத்தரவிட்டுள்ளதால்,விரைவில் ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post