Title of the document


தோட்டக்கலைத் துறையில் உதவி தோட்டக் கலை அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 634 பேருக்கு பணி ஒதுக்கீடு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தோட்டக் கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களில் 805 காலியிடங்கள் இருந்தன. இதற்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் 11-இல் நடந்தது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்வு செய்யப்பட்ட 727 விண்ணப்பதாரர்கள், கடந்த 23 -ஆம் தேதி நேரடியாக தேர்வாணைய அலுவலகத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அன்றே கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் 634 பேருக்கு பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டது. ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் இந்தப் பணி முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post