Title of the document
ஒருநாள், பத்தாம் வகுப்பில் சில மாணவர்களை எழுந்துநிற்கச் சொன்னேன். ஒரு மாணவி மட்டும் எழுந்திராமல், உட்கார்ந்தே இருந்தாள். சிலர் அந்த மாணவியைப் பார்த்துச் சிரித்தார்கள். விஷயம் என்னவென்று புரியாததால், எல்லோரையும் உட்காரச் சொன்னேன். அன்று மாலை, பள்ளி முடிந்ததும் அந்த மாணவி என்னருகே வந்து, `என் டிரெஸ் கொஞ்சம் கிழிஞ்சிருக்கு. அதனால்தான் சார், நீங்க சொன்னதும்  எழுந்திருக்கல" என்றார். அதற்கு அடுத்து சொன்னதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, `இதனால, காலையிலேருந்து சாப்பிட மட்டுமல்ல சார், டாய்லெட்டுக்குக்கூட எழுந்து போகல' என்றபோது என் கண்களும் கலங்கிவிட்டன. உடனே, ரெடிமேட் சீருடை வாங்கித் தந்தேன். அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல எல்லா மாணவர்களுக்கும் புதுச் சீருடை வாங்கித் தர முடிவெடுத்தேன். என்னுடைய பங்களிப்பாக 10,000 ரூபாய் மற்றும் நண்பர்களின் உதவியோடு 82,000 ரூபாய் எனச் செலவளித்து புதிய சீரூடை எடுத்துத் தந்தோம்" என்று சதீஷ்குமார் சொல்லும்போதே அவரின் குரலில் ஒரு நெகிழ்ச்சி. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் எனும் ஊரின் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்தான் சதீஷ்குமார். அவரிடம் பேசினேன்.
``எங்கள் பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நண்பர்களிடம் உதவிக் கேட்கும் சூழல் வரும்போது, முதல் பங்களிப்பாக என்னுடைய தொகையாகத்தான் இருக்கும். குறைந்தது 10,000 ரூபாயாவது அளிப்பேன். சீருடை கொடுத்தது பற்றிச் சொன்னேன் அல்லவா! அதேபோல, மாணவர்களுக்குக் குடிநீர்த் தேவைக்காக, 100 அடிக்கும் அதிகமாகக் குழாய் இறக்கி 2,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி கட்டினோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வசதி தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்றால், பெற்றோர்கள் விரும்பும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க வேண்டும். அதற்கான ஸ்பான்ஸர்ஷிப் பிடித்து அவற்றையும் உருவாக்கினோம். மாணவர் சேர்க்கை காலத்தில், அருகிலுள்ள 22 கிராமங்களில் சுவர் விளம்பரங்கள் செய்து மாணவர்களை ஈர்த்தோம். இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்" என்றவரிடம் சமீபத்தில் கிடைத்த விருது பற்றிக் கேட்டேன்.
``கோயம்புத்தூரில், தலைமை ஆசிரியராக சிறப்பாகப் பணிபுரிந்த ஜெகன்நாதன். அவரின் பெயரால் வழங்கப்படும் விருதை, சமீபத்தில் எனக்கு அளித்தார்கள். பொதுவாக விருது, பாராட்டு என்றால் நான் சற்று ஒதுங்கிக்கொள்வேன். அது என்னுடைய இயல்பு. ஆனால், இந்த விருதை நான் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, 15 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் அலசி ஆராய்ந்து, விருதுக்கு இருவரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதில் நானும் ஒருவன். அடுத்த காரணம், விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவிருப்பது. அந்தப் பணத்தை என் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ள என்பது என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post