Title of the document
Image result for tn hsc result

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (அக்.31) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அன்றைய தினம் பிற்பகல் முதல் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் சான்றிதழ்கள் அளிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மறு கூட்டல் விண்ணப்பம்: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நேரில் சென்று பதிவு செய்யவேண்டும்.
விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடத்துக்கு ரூ. 550 வீதமும், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்துக்கு தலா ரூ.305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post