Title of the document

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடத்துக்கு, 'ப்ளூ பிரிண்ட்' வழங்கப்படாததால், அரசு பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.



தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 1 பாடத்திட்டம், நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் படுத்தும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வில், சிந்தனைத்திறனை தூண்டும் வகையில், பாடப்புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டதால், புதிய பாடத்திட்டத்துக்கான, 'ப்ளூ பிரிண்ட்' வெளியிடவில்லை. இதனால், பாடங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரிய வைக்க முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post