Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வரலாற்றில் இன்று 16.10.2018

Tuesday, 16 October 2018


அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1775 – ஐக்கிய அமெரிக்காவில் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.
1781 – ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டொனெட் கழுத்து வெட்டி மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்.
1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
1905 – ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.
1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
1949 – கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1951 – பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1964 – மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
1973 – ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.
1975 – கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1984 – தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
1987 – தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.
2003 – தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
2006 – ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

பிறப்புக்கள்

1854 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (இ. 1900)
1927 – கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (இ. 2015)
1963 – சூசை, கடற்புலிகளின் தலைவர்
1975 – ஜாக் காலிஸ், தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

1799 – கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760)
1951 – லியாகட் அலி கான், பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் (பி. 1896)

சிறப்பு நாள்

உலக உணவு நாள்
Post a Comment

Popular Posts

 

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்..!' - கல்வியாளரின் வேண்டுகோள்

பிரபா கல்விமணி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்கும் விதத்தில், அரசுப் பள்ளிகளில...

Google+ Followers

Follow by Email

Most Reading