Title of the document

மத்திய பாடத்திட்டத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துமுறை தேர்வுக்கு (practical and theory) சேர்த்து 33% தேர்ச்சி விகிதம் பெற்றால் போதுமானது என்று மத்திய சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பல செய்திகள் வெளிவரும் நிலையில், இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆகையால் மாணவர்கள் குழம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு, செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துமுறை தேர்வுக்கும் (practical  and theory) சேர்த்து 33% தேர்ச்சி விகிதம் பெற்றால் போதுமானது என்று அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு சிறப்பு விலக்காக மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், இம்முறை தேர்ச்சி முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் 2018 -ம் ஆண்டுக்கு மட்டும் 10-ம் வகுப்பு மாணவர்கள் தனித்தனியாக செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துமுறை தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமென்று இருந்த விதியை விலக்கி உத்தரவிட்டது.
ஆனால், இதன்படி கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 2019 மார்ச் மாத தேர்வில், செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துமுறை தேர்வுக்கு (practical  and theory) சேர்த்து 33% தேர்ச்சி விகிதம் பெற்றால் போதுமானது என்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 2019 பிப்ரவரி மாதம் தொழில்முறை தேர்வுகள் நடக்கும் எனவும் மற்ற முக்கிய பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் மட்டுமே அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post