Title of the document


சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்ப தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் கூவக்காபட்டி சவும்யா உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:


பி.எஸ்சி.,(புவியியல்) பி.எட்., முடித்துள்ளோம். 2017 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சியடைந்தோம். 2017 ஜூலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 2014 ல் வெளியிட்ட அரசாணைப்படி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் முன்பு நிரப்பப்பட்டன.






தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் மட்டும்
போதாது; போட்டித் தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் பணியிடம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் எங்களைப் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 2014 அரசாணைப்படி
தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் சமூக அறிவியல்
பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். 2014 அரசாணையை பின்பற்றாமல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு செய்தனர்.


நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post