Title of the document



எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒரே பள்ளியாகத் தொடங்குவது ஏற்புடையதல்ல.! அதனை மறுபரிசீலனை செய்திட தமிழக அரசிற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 சமீபத்தில், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் படிப்பை பாதியிலேயே இடை நிறுத்தம் செய்துவிடும் குழந்தைகளின் நலனுக்காகவும், 10 மாணவர்கள் கூட இல்லாத பள்ளிகளுக்கு செல்விடும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு 3,003 பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியும் நிறுத்தப்பட்டதையும் கவனத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை இணைத்து ஒரே வளாகத்திற்குள் எல்.கே.ஜி. தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதற்காக தமிழகத்திலுள்ள 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய 75 ஒன்றியங்களைத் தேர்ந்தெடுத்தது அரசு.

 இவ்வேளையில், " ஒரே பள்ளியாக தொடங்கினால் பணி பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இருந்து வரும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள் பறிக்கப்படும். தொடக்க-நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பணிகளுடன்  உயர்- மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணிகள் தொடர்புபடுத்திட முடியாத வகையில் முற்றிலும் மாறுபட்டப் பணியாகும். இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிகள் தொடங்குவதன் மூலம் நிர்வாகச் சிக்கல் மட்டுமின்றி எதிர்காலத்தில் ஆசிரியர் பணியிடங்களே இல்லாமல் போகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே, எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத் தொடங்குவது ஏற்புடையதல்ல." என்பதால் இதனை மறுபரிசீலனை செய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post