Title of the document
சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். காலிப் பணியிட விபரங்கள் பின்வருமாறு:- மொத்த காலிப் பணியிடங்கள் : 35 பதவி : இணை பேராசிரியர் : 10 கல்வித் தகுதி : பிஎச்.டி, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எட் வயதுவரம்பு : 57 வயது மிகாமல் இருக்க வேண்டும். முன்அனுபவம் : 8 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர்:- காலிப் பணியிடம் : 3 கல்வித் தகுதி : 10-வது முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு : 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். முன்அனுபவம் : 4 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை. அலுவலக உதவியாளர் :- காலிப் பணியிடம் : 5 கல்வித் தகுதி : 10-வது முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு : 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.4,800 முதல் ரூ.10,000 வரை. இளநிலை உதவியாளர் :- காலிப் பணியிடம் : 6 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பட்டயப் படிப்பு, டிப்ளமோ. வயதுவரம்பு : 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை. உதவியாளர் :- காலிப் பணியிடம் : 1 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் டிகிரி. வயதுவரம்பு : 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை. கண்காணிப்பாளர் :- காலிப் பணியிடம் : 9 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் டிகிரி. வயதுவரம்பு : 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை. உதவி பதிவாளர் :- காலிப் பணியிடம் : 1 கல்வித் தகுதி : எம்பிஏ, எம்.காம், எம்.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி. வயதுவரம்பு : 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை. தேர்வு செய்யப்படும் முறைகள் : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் கணக்கீடு, நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnteu.ac.in என்னும் இணையதள முகவரியில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைந்தும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான டி.டி இணைத்தும் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி :- The Register, TamilNadu Teachers Education University, Chennai - 600097
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post