Title of the document
காரிமங்கலம் அரசு விடுதியில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால், ஊழியர்கள் கட்டாயத்தால் மாணவிகள் குடங்களில் தண்ணீர் சுமக்க ேவண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பழமையான இந்த விடுதியின் மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்நிலையில் விடுயில் போது தண்ணீர் வசதி இல்லாததால், மாணவிகளுக்கான குளியல் அறை, கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் மாணவிகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் குளிப்பதற்கு தேவையான தண்ணீரை, விடுதிக்கு எதிரே அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டியில் மாணவிகள் பிடித்து வந்து பயன்படுத்த ேவண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள், சமையல் செய்வதற்கும், பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான தண்ணீரையும் மாணவிகளை எடுத்து வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார்களும் எழுந்துள்ளது. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விடுதி தொடங்கப்பட்ட நாள் முதல் இதே நிலையே நீடித்து வருகிறது. இது குறித்து மாணவிகள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே விடுதியின் தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post