TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருது!' - அசத்தும் காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி

Sunday, 16 September 2018அரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு விருது பெற்று கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.கடந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது.


 அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் இந்த விருதுக்காக அகில இந்திய அளவில் 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.தேர்வு செய்யப்பட்ட 52 பள்ளிகளில் காரைக்கால் அகலங்கன்னு - அரசு தொடக்கப்பள்ளியும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளும் இந்திய அளவில் `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது பெற்றதால் காரைக்கால் மாவட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.புதுச்சேரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு சார்பில் விருது பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ஆட்சியர் கேசவன், முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இரு பள்ளிகளுக்கும் தலா 50,000 ரூபாய் முதல்வர் பொது நிதியிலிருந்து வழங்கினர்.இதிலும் குறிப்பாக, இந்த விருதை அறிமுகப்படுத்திய கடந்த ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 172 பள்ளிகளில் 17வது இடத்தைப் பெற்ற கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி, இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 பள்ளிகளில் 32வது இடத்தைப் பெற்றுள்ளது.மாணவர்கள் தாகம் தணிக்கச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குப்பைகளற்ற சுற்றுச்சூழல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யும் கழிவறைகள், வகுப்புகள் எடுப்பதற்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி, குழந்தைகள் உணவு உட்கொள்ள டைனிங் ஹால் வசதி, ஏசி, கம்ப்யூட்டர் லேப் வசதி, இயற்கை உரம் கொண்ட ஹெர்பல் கார்டன், பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி எனப் பல நவீன வசதிகளோடு நடைபோடுகிறது கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.


``கடந்த ஆண்டு 86 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை விருது பெற்ற பிறகு,188 ஆக உயர்ந்துள்ளது என்று பெருமிதத்தோடு இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கும் 2 துப்புரவுப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்கிறார்


பொது நிதி திரட்டி, சுயநிதி சேர்த்து பள்ளி நலத்துக்காக உழைக்கும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.விஜயராகவன்.


இது போன்று அரசுப் பள்ளிகள் விருது பெற்றால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறைந்து கல்வி வியாபாரமாவதைத் தவிர்க்கலாம்.

Popular Posts

 

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 13-11-2018

திருக்குறள்:84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற...

Google+ Followers

Follow by Email

Most Reading