சென்னை பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்விப்பிரிவின்கீழ் இளங்கலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பிரிவின்கீழ், மே மாதம் செமஸ்டர் தேர்வு எழுதிய அனைத்து இளநிலை பட்டப்படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல்ஐஎஸ், டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு மே மாதம் செமஸ்டர் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. 
இந்த தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் மாலை 6 மணி முதல் அறிந்துகொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு, 1,000 கட்டணமாகும். மறுகூட்டலுக்கு 300 கட்டணமாகும். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்.18ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் வரை, மேற்கண்ட இணையதளம் மூலம் பணம் செலுத்தி மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சென்னை பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Popular Posts

 

Most Reading

Follow by Email