தசை பயிற்சியாளருக்கு ஊதிய உயர்வுசென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், பார்வை திறன் மற்றும் செவித் திறன் குறையுடையோருக்காக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை 10,000 ரூபாயில் இருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இவ்வாறு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால், 1127 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்கள் பயன்பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் செலவாகும்.

Popular Posts

 

Most Reading

Follow by Email