Title of the document


கோவை : சோமனுார் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்த விபத்தில், கால் இழந்த கல்லுாரி மாணவிக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழக அமைச்சர் வேலுமணி நேற்று வழங்கினார்.

கோவையை அடுத்த சோமனுார் பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை, கடந்த செப்டம்பர் மாதம் இடிந்து விழுந்தது. 5 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். பலியானோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த லதா எனும் மாணவி, தனது உயர் சிகிச்சை செலவினத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் வேண்டுகோள் விடுத்து வந்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, அரசு முடிவு செய்தது. நேற்று பூமார்க்கெட் பகுதியில் நடந்த, சமுதாய வளைகாப்பு விழாவில், கால் இழந்த மாணவி லதாவுக்கு, நிவாரண உதவித்தொகையாக 6 லட்சம் ரூபாய்க்கான செக்கை, அமைச்சர் வேலுமணி வழங்கினார். கலெக்டர் ஹரிஹரன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஏழுமலை, வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post