Title of the document
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, திறன் வளர்க்கும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஐந்து கல்வி மாவட்டத்திற்கு, தலா, ஒரு பயிற்சி மையம் என, ஐந்து பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,399 தொடக்கப்பள்ளிகள், 471 நடுநிலை, 320 உயர் நிலை, 407 மேல்நிலை என, 2,597 பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில், கற்பித்தல் முறையில், பல புதுமையான யுத்திகளை ஆசிரியர்கள் கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகின்றனர்.இருப்பினும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரிவடைந்து வருகிறது. அதை சரி செய்வதற்கு, கல்வித்துறை சிறப்பு வகுப்பு மற்றும் திறனறி தேர்வு என, பல முயற்சி எடுத்து வருகிறது.

எனினும், மெல்ல கற்கும் மாணவர்களால், அரசு பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி எட்டாக்

கனியாகிறது.இதை தவிர்க்க, 'ஸ்லோ லேனர்ஸ் அச்சீவ்மென்ட் புரோகிராம்' என,

அழைக்கப்படும் மெல்ல கற்போருக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளிப்பதற்கு, மாநில ஒருங்கிணைந்த கல்வித்துறை திட்ட

மிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு,

தமிழகம் முழுவதும், தஞ்சாவூர், நாகை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 10 மாவட்டங்களை கல்வித்துறை தேர்வு செய்துள்ளது.

இதில், ஒரு மாவட்டத்திற்கு, 101 பள்ளிகள் வீதம், 1,010 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில், 14

ஆயிரத்து, 500 மாணவர்

களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, புனிததோமையர் மலை ஆகிய கல்வி மாவட்டங்களில், தலா ஒரு பயிற்சி மையம் என, ஐந்து பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன.

இப்பயிற்சி மையத்தில், 101 பள்ளிகளைச் சேர்ந்த, 1,450 மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட

உள்ளது.

இதற்காக, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு, இரு தினம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் மூலம், ஐந்து கல்வி மாவட்டங்களிலும் துவக்கப்படும் பயிற்சி மையங்களில், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளின் மூலமாக, அரசு பள்ளிகளில்,

100 சதவீத தேர்ச்சிக்கு வித்திடுவதற்கு, வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என, கல்வித்துறை

அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஐந்து மையங்கள்

பொதுத்தேர்வுகளில், மெல்ல கற்கும்

மாணவர்களால்,100 சதவீதம் தேர்ச்சி

பெற முடியவில்லை. இதை தவிர்க்க, மெல்ல

கற்கும் மாணவர்களை தேர்வு செய்து, சிறப்பு

வகுப்புகளின் மூலமாக பயிற்சி அளிக்க உள்ளோம். ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு மையம் என,

ஐந்து கல்வி மாவட்டத்திற்கு, ஐந்து

பயிற்சி மையம் துவக்கப்படும். இன்னும்,

இடம் தேர்வு செய்யப்படவில்லை.

-கல்வித்துறை அதிகாரி, காஞ்சிபுரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post