Title of the document
அரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு விருது பெற்று கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.
கடந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் இந்த விருதுக்காக அகில இந்திய அளவில் 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட 52 பள்ளிகளில் காரைக்கால் அகலங்கன்னு - அரசு தொடக்கப்பள்ளியும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளும் இந்திய அளவில் `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது பெற்றதால் காரைக்கால் மாவட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post