Title of the document

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை
ஆதார் எண் இருந்தால் போதும்
தமிழ்நாடு பதிவு (ஆவணப் பதிவிற்காக அடையாள அட்டை சரிபார்ப்பு) விதிகள் 2018 (Tamil Nadu Registration (Identity Verification for the Registration of Documents) Rules, 2018.) மற்றும் பதிவு சட்டம் 1908 ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் ஜே.குமரகுருபரன் 12, செப்டம்பர், 2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கைகள் விவரம் –
ஆதார் எண் இருந்தால் இனி வருங்காலங்களில் பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை.
தமிழகத்தில் சார்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது சிலநேரங்களில் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது.  சமூக விரோதிகள் சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதைத் தடுக்க தற்போது பதிவு துறையில் புதிய யுக்தியை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் நிறுவனத்துடன் (Unique Identifi cation Authority of India) பதிவுத்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியும்.
அதில், இரண்டு பேரின் ஆதார் எண் சரிதானா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதில், குறிப்பிட்ட நபரின் ஆதார் எண் இல்லை எனில் பத்திரம் பதிவு செய்ய முடியாது. மேலும், அவர்களது ஆவணங்கள் முழுவதுமாக சரிபார்க்கப்படும். ஆதார் எண் சரியாக இருந்தால் பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை.
மேலும் வயதானவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களுக்கு கண்விழி ரேகையை வைத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இந்த விதிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
‘போலி ஆதார் எண்ணை’ பயன்படுத்தி சிலநேரங்களில் சொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அந்த புகாரின் பேரில் பதிவுத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்யப்படும் போது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு அவசியம். இவ்வாறு கைரேகை பதிவு செய்யப்படும் போது சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண், முகவரி இதுதானா என்பது பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவரும் இதன்மூலம் போலி ஆவணப்பதிவு முழுவதுமாக தடுக்கப்படும்’
என அறிக்கை தெரிவிக்கிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post