Title of the document
உலக அளவில் புற்றுநோய் பாதித்து உயிரிழக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த குழந்தை முதல் 19 வயது சிறார்கள் வரையில் உலக அளவில் சுமார் 3 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது.
அதிக வருவாய் ஈட்டும் மக்களைக் கொண்ட நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் 80 சதவீதம் குணப்படுத்தப்படுகிறது. அதே சமயம் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களைக் கொண்ட நாடுகளில் 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே புற்றுநோய் சரி செய்யப்படுகிறது.
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறிதல், தொடர் சிகிச்சைகளுக்கு உட்படுத்துவது, சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குணப்படுத்துவது, உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது  போன்ற விஷயங்களில் தொய்வு ஏற்படுவதால், புற்றுநோயை குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதும், புற்றுநோய் சிகிச்சைகள் அனைத்தும் விலை அதிகமாக இருப்பதும் மரணத்துக்கான காரணங்களாக அமைகின்றன.
புற்றுநோய் என்பது உலகின் எந்த மூலையில் இருக்கும் யார் ஒருவருக்கும் எந்த உடல் பாகத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்த செல்கள் வளர்ந்து பெருகுவது புற்றுநோய் எனப்படுகிறது.
பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோயைப் போல, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்குக் காரணங்கள் எதுவும் கண்டறியப்படுவதில்லை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post