Title of the document


வார இறுதி விடுமுறையாக இருந்தாலும், தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில் உச்சத்தை அடைகிறது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் "நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே" என்ற ஆரம்பிக்கும் கவலையான்து, திங்கள் காலையில் ஏதேனும் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாமா? ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பது போன்ற ஏக்கங்களுடனும், கவலைகளுடனும் அன்றைய நாள் முழுவதும் கடந்து செல்கிறது.

ஒரு ஆய்வறிக்கையின்படி பள்ளி செல்லும் சிறுவர்கள் மட்டுமல்ல கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்களுக்கு கூட திங்கட்கிழமை குறித்த ஏக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறது. எனவே, சிறு குழந்தைகள் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை திங்கட்கிழமைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், உங்கள் குழந்தையின் நண்பர்களோடு தொலைபேசியில் பேச வைக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நண்பர்களை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். அந்த ஆர்வம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கான உற்சாகத்தை தரும்.

உங்கள் குழந்தை திங்கட்கிழமை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு தயாராகி சென்றால், பாராட்டி சிறிய பரிசினை அளிக்கலாம். இது திங்கட்கிழமைக்கான ஆர்வத்தை தூண்டும்.

பள்ளி செல்வதற்கான அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கங்களை அளிக்கலாம். இந்த விளக்கங்கள் பள்ளி செல்வதற்கான அக்கறையை உங்கள் குழந்தைக்கு அளிக்கும்.

பள்ளியில் நண்பர்களுடன் செலவழிக்கும் காலம் தான், மிகவும் மகிழ்ச்சியான காலம் என்பதனை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.

குழந்தையின் வளர்ச்சிக்காக, கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் உபயோகமான வகையில் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் வளர்ப்பின் போது, சிறு சிறு செயல்பாடுகளில் காட்டும் ஈடுபாடு தான் பெரிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post