ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை


ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தமிழக அரசு கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வியை தமிழக அரசு வழங்கி வருகிறது.   அத்துடன் அந்த பள்ளிகளின்  மேம்பாட்டுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.   ஆயினும் வருடா வருடம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.


அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவ்ர்கள் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது.   அந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு 56 லட்சமாக குறைந்தது.  இந்த வருடக் கணக்கெடுப்பின்படி அது மேலும் குறைந்து தற்போது 40 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 21378 ஆகும். இதில் 4 அரசுப்பள்ளிகளில் மட்டுமே 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.    அது மட்டுமின்றி 900 பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.   அதே போல் 15 முதல்100  மாணவர்கள் வரை சுமார் 75% பள்ளிகளில் உள்ளனர்.

அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் வள்ர்ச்சி அபரிமிதமாக உள்ளது.   சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப அளவில் இருந்த மெட்ரிக் பள்ளிகள் தற்போது 15000 க்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

Popular Posts

 

Most Reading

Follow by Email