KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மிகவும் குறைந்த ரூ.3,999 விலையில் FACE UNLOCK வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்



இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது

ஹாங் காங்கை சேர்ந்த மொபைல் பிரான்டு ஐவூமி (Ivoomi ) இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிகக்குறைந்த விலையில் 18:9 ரேஷியோ ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் Ivoomi ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர், 1 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிளிகப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IVOOMI- I ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Ivoomi I Pro ஸ்மார்ட்போன் பிளாட்டினம் கோல்டு, இன்டி புளு, மேட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலைகளில் கிடைக்கும் சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

0 Comments:

Post a Comment