Title of the document

பிளஸ் 1 பொது தேர்வு குறித்த அரசாணை மாற்றப்பட்டதால், மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் குறையும்' என,கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்தார். அதில் ஒன்று, 'பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்பட்டு, பிளஸ் 2 முடிவில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு வகுப்புகளின் மதிப்பெண்களும் இணைக்கப்பட்டு, உயர்கல்விக்கான சேர்க்கைக்கு கணக்கில் எடுக்கப்படும்' என்பதாகும்.

பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்படும் என்பது, இரண்டாவது அறிவிப்பு.'பிளஸ் 1 மதிப்பெண்ணும், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 பாடங்களை நடத்தும். அதனால், தமிழக மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் சாதிக்க முடியும்' என, கல்வியாளர்களும் மகிழ்ந்தனர்.

இன்ஜினியரிங் படிப்பிலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றனர்.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வியில் மாற்றம் வருகிறது என்ற கனவை சிதைக்கும் விதமாக, 'பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு கணக்கில் எடுக்கப்படாது' என்ற, புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இது, மட்டும், இரண்டு ஆண்டுகளுக்கும் நடத்தும். தமிழக மாணவர்கள்

நுஒட்டுமொத்தமாக, கல்வியாளர்களையும்,ஆசிரியர் சமூகத்தையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
ஓராண்டுக்கு முன்அரசின் உத்தரவு குறித்து, அவர்கள் கூறிய கருத்து:
ஜெயப்பிரகாஷ் காந்தி - கல்வி ஆலோசகர்: பிளஸ் 1 மதிப்பெண், உயர்கல்விக்கு கணக்கிடப்படாது என்றால், பொது தேர்வு அறிவித்ததன் நோக்கமே கெட்டு விடும்.

மீண்டும், அனைத்து தனியார் பள்ளிகளும், பிளஸ் 1 பாடம் நடத்தாமல், பிளஸ் 2வை ழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாகும்.ஓராண்டுக்கு முன்னர் தான், பிளஸ் 1 தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், அதில், பலர் தோல்வி அடைந்துள்ளனர்.அவர்கள், பிளஸ் 2 முடித்து, உயர்கல்விக்கு செல்வதற்கு சிக்கல் உள்ளது. எனவே, 2017 - 18ல், பிளஸ் 1 எழுதி, தற்போது பிளஸ் 2 படிப்பவர்களுக்கு மட்டும், இந்த சலுகையை வழங்கலாம்.மாறாக, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, இந்த திருத்தத்தை அமல்படுத்த கூடாது. அதேபோல, எதிர்காலத்தில், பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.'பாடம்' நாராயணன் - சமூக ஆர்வலர்: தனியார் பள்ளிகளும், சில அரசு பள்ளிகளும், பிளஸ் 2 பாடங்களை மட்டும், இரண்டு ஆண்டுகளும் நடத்தின.இதனால், அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்கள், பிளஸ் 1 அடிப்படையிலான பாடங்களை தவறவிட்டு, தேர்ச்சியை இழந்தனர். மேலும், அகில இந்திய அளவிலான, உயர்கல்வி நிறுவன தேர்வுகளிலும் தோற்றனர்.ஆனால், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவித்த பிறகே, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓரளவுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்தினர். இதனால், மாணவர்களின் உயர்கல்விக்கு, அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன.மாணவர்களும்,வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, மறைமுகமாக, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இனி, பிளஸ் 2வுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, வணிகமயமாக இயங்கும் தனியார் பள்ளிகள் பாடம் நடத்தும். எனவே, புதிய உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.பேட்ரிக் ரைமண்ட் - பொது செயலர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு: மருத்துவம், இன்ஜி னியரிங், சட்டம், கலை என, அனைத்து பட்டப்படிப்புகளிலும், முதல் இரண்டு பருவ தேர்வுகளுக்கு, பிளஸ் 1 அடிப்படையில் தான், பாடங்கள் உள்ளன.பிளஸ் 2 வகுப்பிலும், பிளஸ் 1 பாடங்களை அடிப்படையாக வைத்தே, பாடங்கள் உள்ளன.எனவே, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என்பது, இணைந்தே படிக்க வேண்டிய பாடங்கள். பிளஸ் 1 தேர்வு, தமிழக மாணவர்கள் உயர்கல்வியில் எளிதாக நுழைவதற்கான, எளிய நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. அதனால் தான், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவித்த போது, அனைவரும் வரவேற்றனர்.
தனியார் ஆதிக்கம்
ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை என்றாலும், மாணவர்களின் நலன் கருதி, மாற்றத்தை ஏற்றனர். ஆனால், திடீரென அரசாணையை மாற்றுவது, மீண்டும், தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு வழி வகுக்கும்.ஏற்கனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான சிறப்பு பயிற்சி தரும் தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்களை நோக்கி, மாணவர்கள் செல்ல, இந்த உத்தரவு வழி வகுக்கும்; எனவே, உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post