Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

FIRST STD (FA) 26 ACTIVITY - PDF DOWNLOAD


SIMPLE SENTENCES FOR PRIMARY STUDENTS

INCOME TAX XL SOFTWARE 2019 VERSION 12WITH DEMO VIDEO 3 PARTS BELOW

School Calender October-2018

About Computer Teachers Vacancy Regard - CM CELL Reply

Flash News : Deployment For Part Time Teachers


PERIODICAL ASSESMENT TEST - TOOLS (2018-2019) :

PTA- முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் காலிப்பணிடம் விவரம் மற்றும் நியமனம் செய்யப்படும் பள்ளிகளின் பெயர் பட்டியல்

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் காலிப்பணிடம் விவரம் மற்றும் நியமனம் செய்யப்படும் பள்ளிகளின் பெயர் பட்டியல்- இராமநாதபுரம் மாவட்டம்

வரலாற்றில் இன்று 28.09.2018

APPOINT PART-TIME COMPUTER SCIENCE TEACHERS TOO'

நெட், ஜே.இ.இ. தேர்வுகள்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி


நெட், ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (செப்.30) கடைசி நாளாகும்.
இத்தேர்வுகளை முதன் முறையாக தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இத்தேர்வுகளுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 9 முதல் 23 வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. 
அதே போன்று ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு-மெயின் (ஜே.இ.இ. - முதல்நிலைத் தேர்வு) 2019 ஜனவரி 6 முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு தேர்வுகளுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு https://ntanet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டிலேயே முதல்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில் மெய்நிகர்க் காட்சித் தொழில்நுட்பப் பாடப்பிரிவு தொடக்கம்


நாட்டிலேயே முதல்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் மெய்நிகர்க் காட்சியாக்கம் (விர்ச்சுவல் ரியாலிட்டி), மெய்நிகர்க் காட்சி மிகுதியாக்கம் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
உயர்கல்வியில் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்கும் வகையில் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி மெய்நிகர்க் காட்சியாக்கம், மெய்நிகர்க் காட்சி மிகுதியாக்கம் ஆகிய பாடப் பிரிவுகளில் சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக, சென்னை ஸ்கோப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழகத்தின்ஆட்சிக் குழுக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், துணைவேந்தர் பொ.குழந்தைவேல் முன்னிலையில், பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல், சென்னை ஸ்கோபிக் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அபுல் ஹசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 
இதையடுத்து, பொ.குழந்தைவேல் நிருபர்களிடம் கூறியது:-
ஒளியியல் துறையில் லேசர் கண்டுபிடிப்புக்கு பின்னர் 3 டி வரிசையில் ஹோலாகிராம் பிம்பங்களை, 3 டி வழியாகப் பார்த்திட தொழில்நுட்பம் வழிவகை செய்தது. ஆனால், கடும் முயற்சியில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. தற்போது வளர்ந்துள்ள மெய்நிகர் தொழில்நுட்பம் கல்வி, ஆராய்ச்சியில் வியக்கத்தகு மாற்றங்களை உருவாக்க உள்ளது.
அறிவியல் ஆய்வுக் கூடங்களில் நிகழ்த்தப்பெறும் ஆய்வுகள் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக நிகழ்த்தும்போது, ஆராய்ச்சியில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும். அதேபோல், மாணவர்களின் கற்கும் திறனிலும் இது அரிய மாற்றங்களை உருவாக்கும்.
நவீன தொழில்நுட்பங்களை ஆன்லைன் வாயிலாக அளித்துவரும் சென்னை ஸ்கோபிக் நிறுவனமானது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பாடங்களைப் பயிற்றுவிக்க உள்ளது. மெய்நிகர் காட்சியாக்கத் துறையில் இந்திய அளவில் முதல்முறையாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை புதிய பாடத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றார்.

முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்

ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு,  அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 25 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 3,000 உயர்நிலைப்பள்ளிகளும், 2,800 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.  அரசு, அரசு நிதியுதவி மட்டுமின்றி சுயநிதி தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், 6ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில்  படிக்கும் பிள்ளைகள் 9ம் வகுப்புக்கு வேறு உயர்நிலைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இதற்கு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் தனித்தனி வளாகங்களாக இயங்குவதே காரணம். இதில் நிலவும் நடைமுறை சிக்கல்களால் கிராமப்புற பெற்றோர், மாற்றுச்சான்றிதழ் பெற்று  படிப்பை தொடருவதற்கான முயற்சியை எடுக்காமல் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இதுபோன்ற நிலையை தவிர்க்க, ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை கொண்டு  பள்ளிகளை கட்டமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இதுபோன்ற கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்திலும் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒரு பள்ளி எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை நவீன கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளின் செயல்பாட்டை தொடர்ந்து வட்டார அளவில் இது  விரிவாக்கப்படும். 

இதுதொடர்பாக, சமீபத்தில் முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழை முதன்மை மொழியாக கொண்டு, ஆங்கில வழி பள்ளியாக  தொடங்குவது என்றும் இந்த  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, இத்திட்டத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் ஏற்படும் அரசியல்ரீதியான எதிர்ப்புகளை சமாளித்து இதனை வெற்றிகரமான திட்டமாக்குவது என  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது பல பள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதனால் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்படும் என்று  தெரிகிறது.

பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டும் குறிப்பிட்ட சதவீதத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது. இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு  மட்டுமே மாதம் 1.5 லட்சம் வரை ஊதியமாகவும், பள்ளிகளுக்கான இதர செலவினங்களும் என அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனை காரணமாக காட்டியே 3,003 பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியும்  நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை கொண்ட பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு-
SPD PROCEEDINGS

கல்வித்துறையில் மாற்றம்: அலுவலக பணிகளில் தடுமாற்றம்

கல்வித்துறை அலுவலகங்களில், 90 சதவிகித பணியாளர்கள் மாற்றப்பட்டதால், அனுபவமின்மை காரணமாக, அலுவலக பணிகளில் தடுமாற்றம் காணப்படுகிறது.



தமிழக பள்ளிக்கல்வித்துறை கீழ், முதன்மைக்கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம், உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடந்த பல ஆண்டுகளாக, தொடர்ந்து குறிப்பிட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நடப்பாண்டில், மூன்றாண்டு பணிபுரிந்த பணியாளர்களுக்கு, கட்டாய இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டு, அதன்படி கடந்த மாதத்தில் மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 90 சதவிகித பணியாளர்கள் மாற்றப்பட்டனர். இதனால், அனைத்து இருக்கை பணிகளிலும், போதிய அனுபமின்மை காரணமாக, தடுமாற்றம் காணப்படுகிறது.


பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலை... மிஸ்பண்ணிடாதீங்க..!  


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ள இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 46  
பதவி: Manager(Electrical) - 1
பதவி: Manager(Mechanical) - 1
சம்பளம்: மாதம் ரூ.61900-196700
பதவி: Deputy Manager(Process &Quality Assurance ) - 1
பதவி: Deputy Manager (Instrumentation) - 1
பதவி: Deputy Manager(Finance) - 1
சம்பளம்: மாதம் ரூ.59300 - 187700
பதவி: Assistant Manager(Materials) - 1
பதவி: Assistant Manager(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500
பதவி: Executive(Mechanical)Lime Stone Crusher - 2
பதவி: Executive(Mechanical) Raw mill - 3
பதவி: Executive (Mechanical) Kiln - 3
பதவி: Executive(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.36200 -114800 
பதவி: Accountant -1
பதவி: CCR Operators-Plant/Lime Stone Crusher - 7
பதவி: Shift Chemist - 3
பதவி: X- Ray Analyst - 3
சம்பளம்: மாதம் ரூ.35600 -112800 
பதவி: Electrician -  4
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570
பதவி: Instrument Mechanic  - 4
சம்பளம்: மாதம் ரூ. 4930 -82-6570
பதவி: Personal Assistant - 2
சம்பளம்: மாதம் 19500 - 62000 
பதவி: Junior Assistant (Materials) - 1
பதவி: Junior Assistant (EDP) - 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பதவி: Time Keeper - 2
சம்பளம்: மாதம் ரூ. 4920-82-6560
பதவி: Driver - 2
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570
தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2018

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்  கழகம் நியமித்து கொள்ளலாம் என்று அரசாணை வெய்யிப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2nd TERM 1st STD TAMIL TEXT BOOK QR CODES

CLICK HERE TO DOWNLOAD QR CODE

Kindly use the following app and scan the picture and download videos in DIKSHA APP and in future use in your classroom

Download application

வரலாற்றில் இன்று 27.09.2018


5th std Lesson Plan Term : 2 - Week : 1


வரலாற்றில் இன்று 26.09.2018

TN SCERT YOUTUBE CHANNEL VIDEO -க்களை அனைத்து ஆசிரியர்களும், கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த இயக்குநர் உத்தரவு

TN SCERT YOUTUBE CHANNEL - பாடப் புத்தக காணொளி பதிவுகளை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த தலைமையாசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு