கண்காணிப்பாளர் வேண்டாம்; நேர்மையாகதேர்வு எழுதுவோம்: அசத்திய கல்லூரி மாணவர்கள்; பெருமிதத்தில் கல்லூரி முதல்வர்உடுப்பி மாவட்டத்தில் கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவ மாணவிகள் கண்காணிப்பாளர் இல்லாமல் தேர்வு எழுதினர்.
தேர்வு அறையில் மேற்பார்வையாளர் இருந்தாலே காப்பியடிப்பதில் வல்லவர்களான மாணவர்கள் இருக்கும் வேளையில் மேற்பார்வையாளரே வேண்டாம் நாங்கள் நேர்மையாக தேர்வு எழுதுவோம் என்று உடுப்பி மாவட்டத்தின் பிரமாவரில் தி கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதி அசத்தியுள்ளனர்.பி.ஏ., பி.காம் தேர்வு எழுதிய 19 மாணவர்கள் இந்த முயற்சியைக் கோரிக்கையாக வைத்து அதற்கு கல்லூரி நிர்வாகவும் சம்மதித்து தேர்வு எழுதியுள்ளனர்.இந்தக் கல்லூரியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300. அதில் 19 மாணவர்கள் எங்களுக்கு தேர்வில் கண்காணிப்பாளர் வேண்டாம், நாங்கள் நேர்மையாகத் தேர்வு எழுதுவோம் என்று கோரிக்கை எழுப்ப, கல்லூரி முதல்வர் எஸ்.கே.சாமுவேல் இதற்குச் சம்மதம்தெரிவித்தார்.இந்தக் கோரிக்கை வைத்த மாணவர்களை அழைத்து அவர் ஏன் இந்த முடிவு என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் கண்காணிப்பாளர் தேவையில்லை நாங்கள் ஒரு போதும் தவறான பாதையில் செல்ல மாட்டோம், நேர்மையாக எழுதுவோம் என்று கூறியுள்ளனர்.

இதற்குச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு தேர்வும் எழுதப்பட்டதையடுத்து இதே நடைமுறையில் பல மாணவ மாணவிகளும் இணைய ஆர்வம் காட்டியுள்ளதாக முதல்வர் சாமுவேல் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Popular Posts

 

Most Reading

Follow by Email