தமிழ் எழுத்துக்களில் ‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்!


தமிழ் எழுத்துக்களில் ‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்!
‘உ’வில் முடியும் சொற்களைப் பற்றி மட்டும் தான் கீழே பார்க்கப் போகிறோம்.


1) “க்” மிகலாம்

* மூவெழுத்து, அதற்கும் அதிகமான எழுத்துள்ள உகரச் சொற்கள் ஒற்றோடு வந்தால் மிகலாம்(கவனிங்க: “மிகணும்” என்று சொல்லவில்லை, “மிகலாம்”)
முத்துக்கள், எழுத்துக்கள், வாழ்த்துக்கள், பழச் சத்துக்கள்
முத்துகள், எழுத்துகள், வாழ்த்துகள், பழச் சத்துகள்

2) “க்” மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள் குறிலாக வந்தால் மிகணும்!
பசுக்கள், அணுக்கள், தெருக்கள்* ஓரெழுத்துச் சொற்கள் வந்தால் மிகணும்!
பாக்கள், ஈக்கள், மாக்கள், பூக்கள்
அலங்கடைகள்: ஐ-யில் முடியும் ஓரெழுத்துச் சொற்கள் – பைகள், கைகள் (ஒரெழுத்து எனினும் ‘க்’ மிகவில்லை!)

3) “க்” மிகவே கூடாது

* ஈரெழுத்துச் சொற்களில் முதலெழுத்து நெடிலாக வந்தால் மிகாது!
வீடுகள், மாடுகள், ஓடுகள்

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்களுக்கு மிகாது
கொலுசுகள், மிராசுகள், தினுசுகள்

* அது ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ, “வு” வரும் போது மட்டும், மிகவே கூடாது!
ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்

Popular Posts

 

Featured post

9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர...

Most Reading

Follow by Email