Title of the document



பள்ளியில் பயிலும் மாணவர்கள்  பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களுடன் ஊசி பாசி விற்கவும், ஜோதிடம் பார்க்கவும் சென்றுவிடுவர்.அடிக்கடி விடுப்பு எடுப்பர்.உள்ளூரில் நடத்தப்படும் சிறு சிறு விஷேசங்களுக்கு செல்லுதல், பெற்றோருடன்  கோயில், திருமணம் போன்றவற்றிற்கு செல்லும் போது பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுதல் போன்ற  காரணங்களுக்காக மாணவர்கள் விடுப்பு எடுப்பதால் பள்ளி பாடம் கெட்டு மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது...வகுப்பில் மாணவர்களின் வருகை குறைவதால்  பாடம் கற்பிக்க முடிவதில்லை. வருகை தந்த மாணவர்களின் ஆர்வமும் குறைகிறது. இதனால் ஒட்டு மொத்தக் கல்வி நலனும் கெடுகிறது...இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று யோசித்து  full month Attendance prize for every month என்ற திட்டத்தை உருவாக்கி கடந்த  3 ஆண்டுகளாக 100% வருகை புரியும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த சிறு பரிசு கொடுப்பேன். மற்ற மாணவர்களின் கைதட்டலும் கிடைக்கும்போது தினமும் வரவேண்டும் என்று  சந்தோஷப்படுவர். முறையாக தினந்தோறும் வருகை புரிதலின் அவசியத்தையும் எடுத்துக்கூறுவேன்..இதை பார்க்கும் பொழுது மற்ற மாணவர்களும்  நாமும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வரவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்
இந்த கல்வி ஆண்டின்  இரண்டாம்  மாதம்  ( July_ 2018)100% வருகை தந்த என் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு Attendance Award ஆக விதை பென்சில் பரிசாக கொடுத்திருந்தேன்.
 "GO GREEN"
என்ற வார்த்தைகளுக்கு உயிர்
கொடுக்கும் முயற்சியாக நான்
மேற்கொண்ட செயல் இது.

மிச்சமிருக்கிற இயற்கையை
காப்பாற்ற நம்மிடம் இருக்கும்
ஒற்றை நம்பிக்கை நமது மாணவர்கள் மட்டுமே என்று
எண்ணி இந்த விதை பென்சில்கள் எனப்படும்
FARMCIL Pencils வாங்கினேன்.

புதுமையை விரைந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
அவர்களிடம் அதிகமாக உள்ளது கண்டு பேரானந்தம்.
பென்சிலில் இருந்து ஒரு செடி உயிர் பெறும்போது நிச்சயம் பல செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படும்.
மரம் வளர்ப்பை அடுத்த தலைமுறைக்கு மறக்காமல் சொல்லித்தரும் முயற்சி இது.
அடிப்படையில் இருந்து உணவு
ஊட்டுவது போல என் செல்லங்களுக்கு உணர்வோடு
கலக்க செய்யும் முயற்சி தான்
நான் செய்வது.
மேலும் இந்த FARMCILS  தன்னம்பிக்கை வரிகள்;
திருக்குறள்கள்;
பொன்மொழிகளை கொண்டுள்ளது.
அவற்றை படித்துக்கொண்டே பயன்படுத்தும்போது நிச்சயம் சாதிக்க தூண்டும்.
Let's all join our hands to plant
more trees& save our planet
from global warming.
P.U.M.School, Pennadam-West,
Nallur Block, Cuddalore District.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post