வேளாண் கல்லூரிகளில் 358 இடங்கள் காலி


வேளாண் இளங்கலை படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நிறைவடைந்தது. தனியார் கல்லுாரிகளில், 358 அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் காலியாக உள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையின்,
14 உறுப்பு கல்லுாரிகள், 26 இணைப்புக் கல்லுாரிகள் வாயிலாக,
12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம்
கல்வியாண்டுக்கு, 3,422 இடங்களுக்கு, 42 ஆயிரத்து, 676 பேர்
விண்ணப்பித்திருந்தனர்.
வேளாண் பல்கலை டீன் மகிமை ராஜா கூறியதாவது:
சிறப்பு ஒதுக்கீடுகள், தொழில் கல்வி,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 7
முதல், 18 வரை நடந்தது. இதில், 2,672 இடங்கள் நிரப்பப்பட்டன.
ஜூலை, 31 முதல் ஆக., 10 வரை நடந்த, இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், 392 இடங்கள் நிரப்பப்பட்டன; உறுப்பு
கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பின. இணைப்பு
கல்லுாரிகளில், 65 இடங்கள், பல்கலையால் நிரப்பப்படும்
 நிலையில், 358 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.இளநிலை
முதலாமாண்டு மாணவர்களுக்கு, இன்று கல்லுாரி துவங்குகிறது.
ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், மாலை, 5:00 மணிக்குள்
மாணவர்கள், சேர்க்கை பதிவு செய்ய வேண்டும்

Popular Posts

 

Most Reading

Follow by Email